OUR CLIENTS
சிறைத்துறை விதிமுறை மீறல் தும்கூரு ஜெயிலுக்கு சசிகலா மாற்றம்! கர்நாடகா உள்துறை பரிந்துரை
சிறைத்துறை விதிமுறை மீறல் தும்கூரு ஜெயிலுக்கு சசிகலா மாற்றம்! கர்நாடகா உள்துறை பரிந்துரை Posted on 19-Jul-2017 சிறைத்துறை விதிமுறை மீறல்  தும்கூரு ஜெயிலுக்கு சசிகலா மாற்றம்! கர்நாடகா உள்துறை பரிந்துரை

பெங்களூர், ஜூலை 19-
பெங்களூரு சிறையில் ஏற்பட்ட விதிமுறை மீறலைத் தொடர்ந்து சசிகலாவை தும்கூரு பெண்கள் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு சிறையில் ஏற்பட்ட விதிமுறை மீறலைத் தொடர்ந்து சசிகலாவை தும்கூரு பெண்கள் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.

வேறு யாராவது சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் அந்த மனுவுக்கு பதில் அளிக்கும்போது சசிகலாவை தும்கூரு சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக சசிகலாவை பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து மாற்ற முடியாது. 

15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இதற்கு ஆகும் சசிகலாவுக்கு அளித்த சலுகைகள் குறித்தும் சிறைத்துறை விதிமுறை மீறல் குறித்தும் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று முதல் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று அங்குள்ள கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சிறையில் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைக ளை பார்வையிடுகின்றனர். சிறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். ஒரு வாரத்தில் அவர்கள் அறிக்கை கொடுக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் பரப்பன அக்ஹார சிறையில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட உள்ளது.

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாம் என்று கர்நாடக உள்துறை முதல்வர் சித்தராமையாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. என்றாலும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டு உத்தரவை பெற்று இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று உள்துறை அதிகாரிகளுக்கு முதல்வர்  சித்தராமையா உத்தரவிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Label