OUR CLIENTS
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனுத் தாக்கல்
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனுத் தாக்கல் Posted on 19-Jul-2017 துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனுத் தாக்கல்

புதுடெல்லி, ஜூலை 19-
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு, மோடி, அமித்ஷா முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதில் புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இவரது பெயரை பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூடி தேர்வு செய்தது.   காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும். மகாத்மா காந்தி- மூதறிஞர் ராஜாஜி 
ஆகியோரின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்மூலம் துணை குடியரசுத் தலைவர்  தேர்தலில் வெங்கை4ரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர் உடன் இருந்தனர். அதிமுக எம்.பி. மைத்ரேயனும் வேட்பு மனு தாக்கலின் போது இருந்தார்.

இதேபோன்று, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு  தாக்கலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  எம்.பி. ஓ பிரையான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேல்-சபையில் அகாலிதளம், தெலுங்கு தேசம், சிவசேனா போன்ற கூட்டணி கட்சிகள் தவிர அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரிப்பதால் வெங்கையா நாயுடுக்கு 557 எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Label