OUR CLIENTS
வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சல்
வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சல் Posted on 19-Jul-2017 வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சல்

மும்பை, ஜூலை 19-
மாராட்டிய மாநில தலைநகரான மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில், வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சலுக்கு கடந்த பதினைந்தே நாட்களில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பி1ழி1 எனப்படும் கொடிய நச்சுக்கிருமிகளின் தாக்கத்தால் பன்றி காய்ச்சல் நோய் உருவாகின்றது. குறிப்பாக, மழைக்காலங்களில் உருவாகும் கொசுக்கள் இந்த நோயை பரப்புவதற்கான காரணியாக கண்டறியப்பட்டுள்ளது.

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதுபோன்ற நோய்த்தொற்றினால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாராட்டிய மாநில தலைநகரான மும்பை, மற்றும் புறநகர் பகுதிகளில், வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சலுக்கு கடந்த பதினைந்தே நாட்களில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, பிரிஹன்மும்பை மாநகராட்சி அலுவலகம்  நேற்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து  874 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 672 பேர் மும்பை நகரை சேர்ந்தவர்கள், 202 பேர் மும்பையின் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 22 பேர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்ததாகவும் அதில் 14 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் மும்பையின் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் ஐந்துபேர் இந்நோயால் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Label