OUR CLIENTS
பூஞ்ச், ரஜோரி எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு
பூஞ்ச், ரஜோரி எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு Posted on 19-Jul-2017 பூஞ்ச், ரஜோரி எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர், ஜூலை 19- 
ஜம்மு&-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாகிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பர்காலி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்று முன்தினம் காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.

  இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நாய்கா எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். எல்லையோரம் வசிக்கும் மக்களில் சிலரும் இந்திய ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் தாக்குதலில் 9 வயது சிறுமியும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில்,நேற்று காலை சுமார் 6.45 மணியில் இருந்து ரஜோரி-பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவேசமாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையால் அருகாமையில் உள்ள பஞ்ச்கிரைன், ராஜ்தானி, நாய்கா உள்ளிட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Label