OUR CLIENTS
மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதே எனது கொள்கை: கோபால் காந்தி
மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதே எனது கொள்கை: கோபால் காந்தி Posted on 19-Jul-2017 மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதே எனது கொள்கை: கோபால் காந்தி

புதுடெல்லி, ஜூலை 19- 
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கோபால் காந்தி, இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதே தனது கொள்கை என தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

வேட்பு மனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கோபால் காந்தி கூறியதாவது:-

“நான் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட மாட்டேன். சிவசேனா கட்சியினர் அவர்களது கடமையை சரியாக செய்து வருகின்றனர். யாகூப் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக நான் குரல் கொடுத்தது சரியான செயல் தான். மரணதண்டனை பழங்கால வழிமுறை. இப்போது அதை தொடர்வது தவறான செயல். 

இந்தியாவில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை. மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரும் இதே கொள்கையை உடையவர்கள், அவர்களிடம் இருந்தே எனக்கு இந்த எண்ணம் வந்தது” என்றார். 

மேலும் பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவிற்கு ஆதரவாகவும் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அவர் கூறினார்.

Label