OUR CLIENTS
குடிநீரை கடத்தி லட்சங்களில் மிதக்கும் திமுகவைச் சேர்ந்த அதிகாரிகள்!
குடிநீரை கடத்தி லட்சங்களில் மிதக்கும் திமுகவைச் சேர்ந்த அதிகாரிகள்! Posted on 20-Jul-2017 குடிநீரை கடத்தி லட்சங்களில் மிதக்கும்  திமுகவைச் சேர்ந்த அதிகாரிகள்!

சென்னை, ஜூலை 20-
சென்னையில் ஏழை மக்களின் குடிநீர் தேவைக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை தங்களது கரன்சி வேட்டைக்காக அதிகாரிகள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். 

இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களே போராட்ட களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். அதுவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக மக்களை திருப்பும் விதமாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அட்டகாசம் திமுகவினர் துணையோடு பகிரங்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது. 

சோழிங்கநல்லூர் தொகுதி மடிப்பாக்கம் பகுதியில் உள்ளது மயிலை பாலாஜி நகர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் இருந்ததால் கடந்த 2011ம் ஆண்டு வடநெம்மேலியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது. அப்போதைய எம்எல்ஏ கே.பி.கந்தன். கவுன்சிலர் பொன்னுசாமி வாயிலாக பிரச்னை தீர்க்கப்பட்டது.

இது முழுக்க முழுக்க மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஆறு மாத காலமாக அதிகாரிகளின் பிடிக்கு உள்ளாட்சி மன்றங்கள் வந்துவிட இங்கு பணிபுரியும் இளநிலை பொறியாளர் கண்மணி, உதவி செயற்பொறியாளர் அப்துல் ரசூல், ஊழியர் பீட்டர் போன்றோர் கூட்டணி போட்டு இந்த பைப்லைனில் தனியார் ஓட்டல்கள் (தேவர் ஓட்டல்), கம்பெனிகளுக்கு தண்ணீரை கடத்தி பொதுமக்களுக்கு நாமம் போட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. 

ஊழியர் பீட்டரை புரோக்கராக வைத்துக் கொண்டு ஒவ்வொரு இணைப்புக்கும் தலா ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு ரெகுலராக வரும் குடிநீரை விற்று விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் மயிலை பாலாஜி நகர் பகுதிமக்கள். முன்பு மடிப்பாக்கத்தை நான்கு பிளாக்குகளாக பிரித்து 1&வது பிளாக் 19 லோடு, 2&வது பிளாக் 48 லோடு, 3&வது பிளாக் 22 லாரி, 4&வது பிளாக் 22 லாரி என்று வாரத்துக்கு தண்ணீர் விட்டதை மெல்ல மெல்ல குறைத்து குறுக்கு வழியில் விற்று மேற்படி மூவர் கூட்டணி கொள்ளையடித்து வருகிறது என்று அதிர்ச்சிகரமான செய்தியை மக்கள் கூறி புலம்புகின்றனர்.

இந்த இளநிலை பொறியாளர் கண்மணி முன்பு நெற்குன்றத்தில் பல மோசடிகளை செய்து இங்கு வந்தவர். அதேபோல் பீட்டர் பெருங்குடி, பள்ளிக்கரணை என்று பணியாற்றி எப்படியெல்லாம் பணம் சுருட்டலாம் என்று கைதேர்ந்தவர். இவர் கொடுக்கும் யோசனை படிதான் இளநிலை பொறியாளரும், உதவி செயற்பொறியாளரும் செயல்பட்டு பங்கு போட்டு மக்கள் வயிற்றில் அடிக்கின்றனர். மகாலட்சுமி நகர் அம்மா உணவகம் அருகே குபேரன் நகர், சதாசிவம் நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், கன்னியம்மன் கோயில் தெரு அருகே என்று டேங்க் வைத்து லாரிகளில் தண்ணீ நிரப்புகின்றனர். 

இதற்காக பீடங்கள் சரிவர இல்லாமல் அவர் விடும் தண்ணீர் எல்லாம் வீணாக போய் விடுகிறது. அதுபற்றி புகார் சொன்னாலும் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை முறைப்படி பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டுவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

 இப்படி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை வேண்டுமென்றே தங்களது சுருட்டல்களுக்காக வீணாக்கிவிட்டு அனுபவம் வாய்ந்த ஊழியர்களையும் பழிவாங்க தொடங்கிவிட்டது இந்த மூவர் கூட்டணி. தொகுதி திமுக பிடியில் இருப்பதால் அதிமுக செல்வாக்கான வார்டுகளில் வேண்டுமென்றே குடிநீர் பிரச்னைகளை தூண்டிவிட்டு மக்களை திசை திருப்பி வரும் இதுபோன்ற திமுக விசுவாச அதிகாரிகளை அவர்களது கரன்சிவேட்டைகளை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்து இடமாற்றம் செய்தால்தான் மக்களுக்கு அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும்.   

ஏழை மக்களுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை விற்றே மாதம் பல லட்சங்களை சுருட்டி வரும் இளநிலை பொறியாளர் கண்மணி, உதவி செயற்பொறியாளர் அப்துல் ரசூல், ஊழியர் பீட்டர் மூவரையும் பற்றி சென்னை மாநகராட்சி முதல் தொகுதி எம்எல்ஏ வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் தாங்களே போராட்ட களத்தில் இறங்க முடிவு செய்துள்ளனராம் தொகுதி மக்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத இந்த ஆறு மாதத்தில் இந்த மூவரும் அடித்த கொள்ளை எவ்வளவு என்பதை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தாலே தெரிந்து விடும். 

நாம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தகவல் சேகரிப்பதை தெரிந்து கொண்ட அந்த தில்லாலங்கடி அதிகாரிகள் தரப்பு, இப்போது தண்ணீர் பிரச்னை இல்லாமல் கிடைக்கச் செய்து மக்களை சமாதானப்படுத்தி வருகிறதாம்.  இதேபோன்று 15&வது மண்டலம் 194வது வார்டு பகுதி பொறியாளர் கிருஷ்ணவேணி. இவர் தான் குடியிருக்கும் வீட்டுக்கு நெம்மேலி குடிநீர் திட்ட பைப் லைனில் இருந்து புதிய குடிநீர் இணைப்பை கொடுத்து தனது அதிகாரத்தை காட்டி விதியை மீறியுள்ளார். 

இதேபோல்தான் பல பகுதிகளில் குடிநீர் வாரிய அதிகாரிகள் அத்துமீறி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பிக் கொண்டே உள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். திமுக அதிகாரிகளை அடையாளம் கண்டு அதிமுக களையெடுக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label