OUR CLIENTS
ரெய்டு செல்லவே பயப்படும் நாகை மாவட்ட போலீசார்!
ரெய்டு செல்லவே பயப்படும் நாகை மாவட்ட போலீசார்! Posted on 20-Jul-2017 ரெய்டு செல்லவே பயப்படும் நாகை மாவட்ட போலீசார்!

நாகப்பட்டினம், ஜூலை 20-
நாகப்பட்டினம் மாவட்டம் என்றதும் நினைவுக்கு வருவது கள்ளச்சாராயம்தான். 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்வேளூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் இளையராஜா. எஸ்எஸ்ஐ லலிதா, தலைமை காவலர் இனயதுல்லா ஆகியோர் கடந்த 13ம் தேதி சாராய ரெய்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது பழையனூர் மேல்பாதி புலியூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஜெயராமன், சுரேஷ், துரை ஆகிய மூவரைப் பிடித்து ஜீப்பில் ஏற்றியுள்ளனர். இதில் சுரேஷ் மட்டும் ஏற மறுத்து அடம் பிடித்துள்ளனர்.

இதனால் அவ¬ நாலு சாத்து சாத்தி ஏற்றியுள்ளனர். வலிப்பு வந்து கீழே விழுந்த சுரேஷ் அசைவற்று கிடக்கவே பயந்துபோன போலீசார் அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்ல போலீசாருக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுரேஷின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அத்துடன் சுரேஷின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட பரபரப்பு ஏற்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஏஎஸ்பி சந்திரசேகர், சப்&கலெக்டர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பயனாக போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்க, சம்மந்தப்பட்ட போலீசார் கலக்கத்தில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவையடுத்து பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராய தொழில் கொடிகட்டி பறக்குது. அத்துடன் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சரக்குகளையும் கடத்தி வந்து லாபம் வைத்து விற்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் உயரதிகாரிகளின் உத்தரவையடுத்தே ரெய்டு செல்கிறோம். 

இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள்தான் சிக்கிக்கொள்வோம். எங்களை ரெய்டு செய்ய உத்தரவிட்ட உயரதிகாரிகள் எங்கள் மீதே நடவடிக்கை எடுத்து தப்பித்து கொள்கிறார்கள். என்ன காரணம் சொன்னாலும் அதை காதில் கூட போட்டு கொள்வதில்லை. 

இப்படி எங்களை உயரதிகாரிகள் காப்பாற்றி விட்டால் எப்படி ரெய்டுக்கு போக மனம் வரும்? இதை வெளியில் சொல்ல முடியாமல் பெரும் மன உளைச்சலுடன் தவித்து வருகின்றோம் என்றனர் வருத்தமான குரலில். போலீசாருக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு கள்ளச்சாராய வியாபாரிகள் அனுபவித்து வருகின்றனர். 

Label