OUR CLIENTS
குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Posted on 20-Jul-2017 குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுடெல்லி, ஜூலை 20-
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதியகுடியரசுத் தலைவரயை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.  776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 மேஜைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில், பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்  என்று குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா தெரிவித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Label