OUR CLIENTS
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால், நான் போட்டியிடவில்லை தி.மு.க. பியூஸ் போன பல்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால், நான் போட்டியிடவில்லை தி.மு.க. பியூஸ் போன பல்பு - பொன்.ராதாகிருஷ்ணன் Posted on 21-Jul-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால், நான் போட்டியிடவில்லை  தி.மு.க. பியூஸ் போன பல்பு - பொன்.ராதாகிருஷ்ணன்

அவனியாபுரம், ஜூலை 21-
தி.மு.க. பியூஸ் போன பல்பு. ஏதாவது ஒரு கொடிமரத்தை பிடித்து ஏறிவிடலாம் என நினைக்கின்றனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டால் நான் போட்டியிடவில்லை என மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபம் வருகிற 27-ந்தேதி ராமேசுவரம் பேக்கரும்பில் திறக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நானும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் இன்று ராமேசுவரம் செல்கிறோம். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெறுவது உறுதி.

நடிகர் கமல்ஹாசன் எந்த சிந்தனையில் கருத்து கூறி வருகிறார் என தெரியவில்லை. பா.ஜனதா ரஜினிக்கு ஆதரவாகவும், கமலுக்கு எதிராகவும் கருத்து கொண்டுள்ளதால் கேள்வி எழுப்புகிறீர்கள்.

நான் இதுவரை கமலை பற்றி எதுவும் பேசவில்லை. இதனால் அதுபற்றி கருத்து சொல்ல முடியாது.  கமலுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக கூறுகிறீர்கள்.

தி.மு.க. பியூஸ் போன பல்பு. ஏதாவது ஒரு கொடிமரத்தை பிடித்து ஏறிவிடலாம் என நினைக்கின்றனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால் பா.ஜனதா எதிர்த்து களம் இறங்குவது பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால் நான் போட்டியிடவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Label