OUR CLIENTS
உடனுக்குடன் அசத்தல் நடவடிக்கை தருமபுரி எஸ்பி பண்டிட் கங்காதர்!
உடனுக்குடன் அசத்தல் நடவடிக்கை தருமபுரி எஸ்பி பண்டிட் கங்காதர்! Posted on 21-Jul-2017 உடனுக்குடன் அசத்தல் நடவடிக்கை  தருமபுரி எஸ்பி பண்டிட் கங்காதர்!

தருமபுரி, ஜூலை 21-
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் படு சூப்பர் என்று பொதுமக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பண்டிட் கங்காதர். இவர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் இருந்தே எந்த வழக்காக இருந்தாலும் தீர விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் சட்டம்&ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். 

இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஒரு வழக்கு விசாரணையை இங்கு நினைவு கூறுவோம். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை. கணவர் தனது தங்கை மற்றும் தாய்க்கும் எந்தவித உதவியும், பணமும் கொடுக்கக் கூடாது என்று மனைவி சண்டையிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். 

பெற்றவளுக்குகூட பணம் கொடுக்கக்கூடாது என்று சண்டைபோடுவதால் என்ன செய்வதென்று தெரியாத கணவன். கணவனை பிரிந்து வாழும் தன் தங்கைக்கு பண உதவி செய்தார். இச்செயல் அவரது கடமை என்றே சொல்லவேண்டும். 

ஆனால் அவருடைய மனைவி எவ்வாறு பணம் தந்தாய் என்று சண்டையிட்டு தன் தாய்வீட்டுக்கு சென்று விட்டார். அப்பெண்ணின் தாய்வீட்டில் தவறான அறிவுரைகள் கூறி அப்பெண்ணை தவறான வழி நடத்தி காவல் நிலையத்தில் தன் கணவருக்கு தவறான தொடர்பு உள்ளது என்றும், தன்னை துன்புறுத்துவதாகவும் பொய்யான புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில்,  காவல் நிலையத்தில் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. ஆதலால் விவாகரத்து பெற்றுக் கொள்ள விரும்புவதாக அந்த பெண் தாமாக முன்வந்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் இருந்து சொத்துக்களை பறிக்கும் நோக்கில் மனைவி செயல்படுவது தெரியவந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதரை கணவன் தரப்பினர் சந்தித்து முறையிட்டனர்.

 இதைத்தொடர்ந்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரோஜாவை தொலைபேசியில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் உரிய விசாரணை நடத்தி வழக்கை முடித்து தருமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து காவல் ஆய்வாளர் சரோஜா,  கணவன், மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கணவனின் சொத்துக்களை அபரிக்கும் நோக்கில் மனைவியின் செயல்பாடு இருப்பதை அறிந்து கொண்டும் ஆய்வாளர் சரோஜா அந்த பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டார். 

இதைத்தொடர்ந்து அந்த கணவன் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வழக்கு விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதை விளக்கி கூறினார்.  இந்நிலையில் இதற்கு பின்னணியில் அந்த கணவன் இன்று இரவு வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதை கெடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் அந்த பெண் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனால் அந்த பெண்ணுக்கு நேற்று கவுன்சிலிங் கொடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.  ஆனால் அந்த கணவரை மட்டும் மீண்டும் மீண்டும் காவல் நிலையத்துக்கு தொடர்ந்து வருமாறு அழைத்து டார்ச்சர் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த பெண் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். 

கணவன் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மனைவி திட்டமிட்டு செயல்படுவது வெட்டவெளிச்சமாக வெளிவந்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கணவன் வெளிநாடு செல்வதை தடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது உறுதிபட தெரிந்துள்ளது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணை குறித்து கேட்டறிந்தார்.   அப்போது விசாரணையில், கணவர் வெளிநாட்டில் விரிவுரையாளராக வேலைபார்த்துவருகிறார். 

இப்பெண் அவருடன் வெளிநாட்டில்தான் வசித்து வந்தார். தற்பொழுது 2 மாத விடுமுறையில்தான் வந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் எப்படி இங்கு உள்ள பெண்ணுடன் தவறான தொடர்பு என்று பொய் புகார் கொடுக்க முன்வருகிறார் என்பதுதான் புரியவில்லை. 

தவறான பெற்றோர்களில் தவறான அறிவுரையால் அப்பெண் இவ்வாறு நடந்துகொள்வது அம்பலமாகியது. அதுமட்டுமின்றி தனது பெற்றோருக்கு பணம் தேவைபடுகிறது என்று அடுக்கடிக்கு பணம் வாங்கி கொடுத்து வந்துள்ளார். 

தன் பெற்றோருக்கும் பணம் கொடுக்கும் மனைவி, தன் கணவர், அவரது தங்கை, தாய்க்கு உதவி செய்வதை குற்றம் சொல்வது எப்படி. அதுமட்டுமின்றி இப்பெண் மிகவும் ஏழ்மையான குடுமபத்தை சேர்ந்தவர் அப்படி இருக்கையில் ஒரு ரூபாய்கூட வரதட்சணை வாங்கமால் திருமணம் செய்த நல் உள்ளத்தை காவல் நிலையத்தில் காக்க வைத்துவிட்டால் அந்த பெண். 

விசாரணை முடிவில் கணவர் மீது மனைவி பொய் புகார் கொடுத்திருப்பது உறுதிபட தெரிந்துள்ளது. பணத்தை பறிக்க வேண்டும் என்ற பிராதனமாக நோக்கத்தோடு பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சில பெண்கள் பொய் புகார் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் விசாரணையை நடத்தி முடித்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரோஜா அது பொய் புகார் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அந்த பெண்ணின் கணவரை அனுப்பி வைத்துள்ளார். 

விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டிருப்பார். அவர் வெளிநாடு செல்வதும் பாழாகியிருக்கும். அவரது வேலையும் பறிபோய் இருக்கும். இப்படி பல பெண்கள் நாட்டில் உலா வருகின்றனர்.

 இதை வெளி உலகுக்கு கொண்டு வந்து தர்மத்தை நிலைநாட்டிய பெருமையும், ஆண் தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட பெருமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதரையே சேரும். கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி அடுத்து நாட வேண்டியது விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றத்தை தானே தவிர அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அல்ல என்பதை இதுபோன்ற பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். போலீசார் என்ன வேலை வெட்டி இல்லாமலா உள்ளனர். 

அவர்களது பொன்னான நேரத்தை வீணாக்கி கொண்டுள்ளனர் இதுபோன்ற சில பெண்மணிகள். கணவர் தேவையில்லை அவரது சொத்து மட்டும் சில மனைவிமார்களுக்கு தேவைப்படுகிறது. இது என்ன நியாயம். எந்த வழக்காக இருந்தாலும் தீர விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

இதனால் தலைக்கு வந்தது அந்த கணவருக்கு தலைப்பாகையுடன் போனது என்பது போல விசாரித்ததால் உண்மை வெளிவந்தது. இல்லையெனில் இதுபோன்ற பெண்களை நம்பி புகார் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால் அவரது நிலைமை பரிதாபத்துக்கு உரியதாகி இருக்கும். 

அவர் இப்போது வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது இன்றுவரை மதில்மேல் பூனை மாதிரி உள்ளது. இதுபோன்று பொய் புகார் கொடுக்கும் பெண்கள் மீது அதே மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் பொய் புகார் கொடுக்கும் பெண்கள் காவல் நிலையத்தை நாடி வர மாட்டர்கள்.

 ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று விசாரித்து நீதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்மையும், அவரது நெஞ்சில் உள்ள ஈரமும் 'கருணையின் நிறம் காக்கி' என்பதை நினைவூட்டுகிறது. 

இதுபோன்ற உயரதிகாரிகள் காவல் துறையில் உள்ளவரை காவல் துறைக்கு என்று பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் என்றும் மறையாது. இறுதியில் தர்மமே வென்றது. நீதி பிழைத்தது.

 தருமபுரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் போன்று அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை அதிகாரிகள் அமைந்து விட்டால் போதும் சட்டம் ஒழுங்கும் கெடாது, நாட்டின் அமைதி நிலவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே சொல்லலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர் செயல்பாட்டுக்கு பொதுமக்கள் சார்பில் வணக்கங்கள் பல தெரிவித்து மகிழ்வோமாக... இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Label