OUR CLIENTS
மோடி ஆட்சிக்கு வந்த பின் சீன மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது...! இச்செயல் போருக்கு வழிவகுக்கும் - குளோபல் டைம்ஸ் பத்திரிகை
மோடி ஆட்சிக்கு வந்த பின் சீன மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது...! இச்செயல் போருக்கு வழிவகுக்கும் - குளோபல் டைம்ஸ் பத்திரிகை Posted on 21-Jul-2017 மோடி ஆட்சிக்கு வந்த பின் சீன  மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது...! இச்செயல் போருக்கு வழிவகுக்கும் - குளோபல் டைம்ஸ் பத்திரிகை

 பெய்ஜிங், ஜூலை 21-
இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தபின் சீனா மீதான எதிர்ப்பு வலுத்து வருவதாக அந்த நாட்டு பத்திரிகை கூறி உள்ளது.

 சிக்கிம் எல்லை அருகே இந்தியா–-சீனா-–பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவ வீரர்கள்  தடுத்து உள்ளனர்.  எனவே எல்லையில் போர் பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா தனது வீரர்களை வாபஸ் பெறும்வரை பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது என சீன தரப்பில் பிடிவாதமாக கூறப்பட்டு வருகிறது.  இது தவிர இந்தியா மீது போர்தொடுப்போம் என சீன பத்திரிகைகள் மிரட்டி வருகின்றன. 

இந்த நிலையில் சீனாவின் அரசு சார்பில் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறி இருப்பதாவது: 1962 சண்டைக்குப் பிறகு இந்தியாவில் சீனா மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது. சீனாவை பழிவாங்க வேண்டும் என்று அந்த நாட்டின் தேசியவாதிகள் வலியுறுத்துகிறார்கள். மோடி பிரதமரானதில் இருந்து இந்த உணர்வு அதிகரித்து உள்ளது. 

இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து தேசப்பற்றாளர்களின் வன்முறையை தடுக்க தவறிவிட்டது. சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீது இந்தியா கடினபோக்குடன் இருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தேசியவாதம், அந்த நாட்டின் சீன கொள்கையை பறித்துவிட்டது.  மத தேசியவாதத்தை இந்தியா கைவிடவேண்டும். இல்லையென்றால்  இது போருக்கு வழிவகை செய்யும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

Label