OUR CLIENTS
கைதிகள் எதிர்ப்பால் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா அதிரடி இடமாற்றம்
கைதிகள் எதிர்ப்பால் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா அதிரடி இடமாற்றம் Posted on 21-Jul-2017 கைதிகள் எதிர்ப்பால்  பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா அதிரடி இடமாற்றம்

பெங்களூரு, ஜூலை 21- 
பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளராக இருதினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட அனிதா கைதிகளின் எதிர்ப்பால் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10-ம் தேதி, கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு செய்த பின்பு, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறினார். இதுதொடர்பாக கடந்த 12-ம் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஊடகங்களில் விதிகளை மீறி பேட்டி அளித்த குற்றச்சாட்டிற்காக டிஐஜி ரூபா இரு தினம் முன்த அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் 4 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். டிஜிபி சத்திய நாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமாரையும் உடனடியாக மாற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ண குமார் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர். 

இதனையடுத்து, புதிய சிறை கண்காணிப்பாளராக அனிதா நியமனம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் மீண்டும் காலை உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இந்த நிலையில், பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளராக இருதினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட அனிதா கைதிகளின் எதிர்ப்பால் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கண்காணிப்பாளராக ரமேஷ் நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளார். 

Label