OUR CLIENTS
குர்திஷ் போராளிகள் தாக்குதல்: துருக்கியில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
குர்திஷ் போராளிகள் தாக்குதல்: துருக்கியில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு Posted on 10-Aug-2016 குர்திஷ் போராளிகள் தாக்குதல்: துருக்கியில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அங்காரா:
ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந்நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் மற்றும் துருக்கி நாடுகளுக்கான எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகள், அவ்வப்போது துருக்கியின் எல்லையோர பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்துகின்றனர்.


இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்திஷ் போராளிகளின் தாக்குதல்களுக்கு சமீபகாலமாக துருக்கி இரையாகி வருகிறது.

இந்நிலையில், துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிர்நாக் மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட உளுதேர் மாவட்டத்தில் குர்திஷ் போராளிகள் (குர்திஷ் தொழிலாளர் கட்சி) இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள்  உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

8 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ராணுவ வாகனம் உளுதேர் மாவட்டத்தின் வழியாக செல்லும்போது இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Label