OUR CLIENTS
அ.தி.மு.க. அணிகள் இணையும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை
அ.தி.மு.க. அணிகள் இணையும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை Posted on 29-Jul-2017 அ.தி.மு.க. அணிகள் இணையும்  முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

சென்னை, ஜூலை 29-
அ.தி.மு.க. அணிகள் இணையும் என்று நம்புகிறேன் என திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பால திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கேள்வி: இரு அணிகளின் இணைப்பிற்கான பணிகள் ஏதாவது போய்க் கொண்டிருக்கிறதா?
பதில்: இணைப்பு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன்.

கேள்வி:- நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கேட்டிருக்கிறீர்களே. இன்னும் அதில் சாதகமான முடிவு வரவில்லையே?
பதில்:- சில பிரச்சினைகள் ஏற்படும் பொழுது காலதாமதம் ஏற்படுவது சகஜம். நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டுமென்று தொடர்ந்து பிரதமரிடம் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கேள்வி: நீட் தொடர்பாக, அவசர சட்டம் ஏதாவது கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: நான் பலமுறை சொல்லிவிட்டேன். தொடர்ந்து பாரதப் பிரதமரிடத்திலே தமிழகத்திற்கு  நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது.  

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து எத்தனை நாளில் சாதகமான பதில் வரும்?
பதில்:- இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவுக்கு இதில் முடிவுகள் எடுக்கப் படும்.

கேள்வி: நீட் விவகாரத்தில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறதா?
பதில்: நான் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், மாணவர்களுடைய நலன் கருதி, நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டுமென்பது தான் நம்முடைய நிலைப்பாடு. இது உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே இதுகுறித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்று நன்றாகத் தெரியும். மாநில அரசைப் பொறுத்தவரைக்கும், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது, தமிழக மாணவர்களுடைய நலன் காக்கப்படவேண்டும் என்ற முழு அக்கறையோடு, கவனத்தோடு செயல்படுகின்றது.  தமிழகத்திலே நீட் தேர்விற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு.  நான் பலமுறை பாரதப் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன்.  எங்களுடைய அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து சொல்லியிருக்கின்றோம்.  ஆகவே, தொடர்ந்து மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்கும்.  நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  இதையெல்லாம் கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவிற்கு ஒரு முடிவு எட்டப்படவேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு, மத்திய அரசுக்கு இதை வலியுறுத்தி சொல்லியிருக்கின்றோம்.

கேள்வி:- நீட் நுழைவுத் தேர்வில் அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளதே?
பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. மாநில அரசை பொறுத்தவரை தமிழக மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அதற்காகத்தான் நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் எங்களது அமைச்சர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். 

Label