OUR CLIENTS
5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு பாராளுமன்றத்தில் கனிமொழி எதிர்ப்பு
5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு பாராளுமன்றத்தில் கனிமொழி எதிர்ப்பு Posted on 29-Jul-2017 5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு பாராளுமன்றத்தில் கனிமொழி எதிர்ப்பு

சென்னை, ஜூலை 29-
மத்திய அரசு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:- மத்திய அரசு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மிகவும் வருத்தத்திற்குரியது. ஏற்கனவே பள்ளிகளில் இருந்த படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த பொதுத் தேர்வால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக ஊரக பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். மத்திய அரசு இந்த நடவடிக்கையை கைவிடும் என்று நம்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் பதிலளித்தார். அவர் கூறியதாவது: இந்த பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் உரிமையை நாங்கள் மாநிலங்களுக்கு அளித்திருக்கிறோம். பொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை மாநிலங்கள் தனித் தனியாக முடிவு செய்யலாம்.

பல தேர்வுகளில் 3-ம் வகுப்பு பாடத்தைக் கூட 5-ம் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கலந்தாய்வுக்கு பிறகே மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் முறையையும் அறிமுகப் படுத்தியிருக்கிறோம். நாங்கள் இது மட்டு மல்லாமல், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் முறையையும் அறிமுகப்ப டுத்தியுள்ளோம் என்று கூறினார்.

Label