OUR CLIENTS
ஆரோக்யா, டோட்லா மற்றும் விஜய் நிறுவன பால்களில் கலப்படம்!
ஆரோக்யா, டோட்லா மற்றும் விஜய் நிறுவன பால்களில் கலப்படம்! Posted on 29-Jul-2017 ஆரோக்யா, டோட்லா மற்றும் விஜய் நிறுவன பால்களில் கலப்படம்!

சென்னை, ஜூலை 29-
ஆரோக்கியா, டோட்லா, விஜய் ஆகிய நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், ஆரோக்கியா, டோட்லா, விஜய் ஆகிய நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் செய்யப்பட்ட சோதனையில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, அதற்குரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

பால் கலப்படம் தொடர்பாக தாம் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும், பால் மாதிரி சோதனைகளின் அடிப்படையில் கிடைத்த அறிக்கையின் படியே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது என்றும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க வரும் செவ்வாய்க்கிழமை வரை, தனியார் பால்நிறுவனங்களின் சார்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Label