OUR CLIENTS
மாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை-2017 :முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு
மாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை-2017 :முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு Posted on 29-Jul-2017 மாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை-2017 :முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு

சென்னை, ஜூலை 29-
தமிழகத்தில் சுற்றுச்சூழல் கொள்கையினை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017-ஐ நேற்று வெளியிட்டார்.

இம்மாநிலத்திற்கான தனிப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டும், ஜெயலலிதா  2012ம் ஆண்டு அறிவித்த தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் -2023-ல்  குறிப்பிட்டுள்ள இலக்குகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை மேம்படுத்த அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடனும், தொழில் அமைப்புகள், கல்வியாளர்கள், பொது மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கருத்துகளையும் பெற்று தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை, 2017 வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017, சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல், சுற்றுச்சூழல் சார்ந்த நலத்திட்டங்களை மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல்  ஆகியவற்றை  நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மேலும், இக்கொள்கையின் நோக்கங்களை செயல்படுத்த ஏதுவாக  நீர் ஆதாரம், காற்று,  நிலம், கடலோரப் பகுதிகள், வனங்கள், வனவிலங்குகள் மற்றும் பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண்மை, தொழில்மேம்பாடு, நகர்மயமாதல், எரிசக்தி மற்றும் இதர இனங்களில் எடுக்கப்பட வேண்டிய உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்  குறித்தும் இக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நோக்கங்களை அடைய, சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மற்றும்  செயலாக்க முகமைகள், நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு தேவையான உத்தரவுகளையும் அறிவுரைகளையும் வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  கே.சி. கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் எச். மல்லேசப்பா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label