OUR CLIENTS
நுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலர்களுக்கு மடிக்கணினி
நுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலர்களுக்கு மடிக்கணினி Posted on 29-Jul-2017 நுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலர்களுக்கு மடிக்கணினி

சென்னை, ஜூலை 29-
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும்  முதுநிலை மண்டல மேலாளர்கள்,  மண்டல மேலாளர்கள் மற்றும் அலகு அலுவலர்கள் ஆகிய  51 அலுவலர்களுக்கு  44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக, 7 அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 

தமிழ்நாட்டில் தற்போது பொதுவிநியோகத் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக  கணினிமயமாக்கப்பட்டுள்ளன.  பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்   சொந்தமாக பல கிடங்குகளையும், வாடகை கிடங்குகளையும் பராமரித்து வருகிறது.  

இவைமட்டுமின்றி அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்,  நியாயவிலைக் கடைகள், நவீன அரிசி ஆலைகள், நேரடி நெல்  கொள்முதல் நிலையங்கள், மண்ணெண்ணெய் பங்க்குகள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் சமையல் எரிவாயு அலகுகள் (லிறிநி நிணீs ஹிஸீவீts)  ஆகியவற்றை பராமரித்து வருகிறது.  இத்தகைய நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல் மற்றும் இருப்பினை கூர்ந்து கவனிக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளை திறம்பட கண்காணிப்பதற்கு  ஏதுவாகவும், அத்தியாவசியப் பொருட்களின்  கொள்முதல், இருப்பு மற்றும் நகர்வினை  அவ்வப்போது கண்காணிக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகிய  51 அலுவலர்களுக்கு 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான  51 மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 7 அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் இரா. காமராஜ், தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் / நிர்வாக இயக்குநர் கே. கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ். மதுமதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label