OUR CLIENTS
மன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்
மன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர் Posted on 29-Jul-2017 மன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்

நடிகை பாலியல் தொல்லை சர்ச்சையில் நடிகர் திலீப், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திலீப் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர். தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு வட அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெறுவதற்காக அந்நாட்டுக்கு சென்றிருந்தார் மஞ்சுவாரியர். 

விருது பெற்றுக்கொண்டு அவர் பேசும்போது, ‘இந்த விருதை பெற தேர்வு  செய்ததற்கு நன்றி. வேட்டா மற்றும் கரின்குன்னம் 6 எஸ் ஆகிய 2 படத்துக்காக  எனக்கு விருது தரப்பட்டிருக்கிறது. இந்த விருதை வேட்டா பட இயக்குனர் ராஜேஷ்  பிள்ளைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன்  என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை. எனக்கு மிகுந்த மனஉளைச்சலும் என்னை சுற்றிலும் அழுத்தமும் இருந்தது. மேலும் ஆமி படப்பிடிப்பிலும் நான் பிஸியாக  இருந்தேன். 

அதனை மாற்றி அமைத்துக் கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்’  என்றார். கேரளாவில் நடிகை கடத்தல் தொடர்பாக திலீப் மீது வழக்கு நடந்து வரும் நிலையில் மஞ்சுவாரியர் விருது பெறுவதற்காக வட அமெரிக்கா செல்ல வேண்டாம் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். அதையும் மீறி அவர் வட அமெரிக்கா சென்று விருது பெற்று திரும்பி உள்ளார். கடத்தப்பட்ட பிரபல நடிகை, மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழி ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக மஞ்சுவாரியரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label