OUR CLIENTS
டிடிவி தினகரன் பேட்டி எதிரொலி 8 அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!
டிடிவி தினகரன் பேட்டி எதிரொலி 8 அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை! Posted on 02-Aug-2017 டிடிவி தினகரன் பேட்டி எதிரொலி 8 அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!

சென்னை, ஆக.2-
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்பான பேட்டி அளித்திருக்கும் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் 8 அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும், கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

அதிமுக அம்மா அணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேற்று மாலை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை,  தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனை  கூட்டத்தில் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

'நீட்' தேர்வு அனுமதி விவகாரம், ரேஷன் மானியம் ரத்து உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும், கட்சியில் அதிமுக இரு அணிகள் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிகிறது.

இந்த நேரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label