OUR CLIENTS
சென்னை மாவட்டத்தில் 1244 அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை மாவட்டத்தில் 1244 அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு Posted on 02-Aug-2017 சென்னை மாவட்டத்தில்  1244 அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ், அங்கன்வாடிப் பணியாளர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. வரும் 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 1244
பணி: அங்கன்வாடிப் பணியாளர் - 443
பணி: குறு அங்கன்வாடிப் பணியாளர்  - 158
பணி: அங்கன்வாடி உதவியாளர் - 643
மேற்கண்ட பணியிடங்களுக்கு இன்று முதல் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:  அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்த உள்ளூர் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Label