OUR CLIENTS
கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆக.12ம் தேதி விவாதிக்க ஏற்பாடு! : செங்கோட்டையனுக்கு அன்புமணி சவால்...
கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆக.12ம் தேதி விவாதிக்க ஏற்பாடு! : செங்கோட்டையனுக்கு அன்புமணி சவால்... Posted on 09-Aug-2017 கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து  ஆக.12ம் தேதி விவாதிக்க ஏற்பாடு! : செங்கோட்டையனுக்கு அன்புமணி சவால்...

சென்னை, ஆக.9-
தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து வரும் 12-ம் தேதி விவாதிக்கத் தயார் என்று முதலில் சவால் விடுத்த கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் அழைப்பை ஏற்கத் தயார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக நேற்று அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார்.  அந்தச் சவாலையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன்.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என எனக்குச் சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர்தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.

அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும்.
இந்த விவரங்களை ஏற்றுக் கொண்டு இவ்விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Label