OUR CLIENTS
ஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை!
ஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை! Posted on 09-Aug-2017 ஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை!

திருவள்ளூர், ஆக.9-
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த ஆவடி நகராட்சியில் வரி கட்டவந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் வரி வசூல் செய்யஆட்கள் இல்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படி பொறுப்பில்லாமல் இந்த நகராட்சியில் வரி வசூல் செய்யும் மையத்தில் பணியாற்றுவோர் நடந்து கொள்கின்றனர். காலை திறக்க வேண்டிய வரி வசூல் மையம் பிற்பகல் திறக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் வரி செலுத்த சென்ற பொதுமக்களிடம் கூடுதலாக குப்பை அள்ள ரூ.30 தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் வரி வசூல் மைய அலுவலருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் திடீரென குப்பைக்கு பணம் வசூலிப்பது முறையல்ல என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குப்பை அள்ள வீடுகளுக்கு வருவோரிடம் நாங்கள் மாதந்தோறும் ரூ.50 முதல் ரூ.100 வரை செலுத்துகிறோம் என்று பொதுமக்கள் வாதிட்டனர். ஆனால் இதற்கு இசைவு தெரிவிக்காத வரி வசூல் மைய அலுவலர் இங்கும் பணம் செலுத்தினால் மட்டுமே வரி வசூல் செய்வேன் என்று தெரிவித்தார். அத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் செய்தோம் என்று தெரிவித்தார் அந்த வரி வசூல் மைய அலுவலர். 

இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய பொதுமக்களோ நாங்கள் பத்திரிகைகளில் வந்த விளம்பரங்களை பார்க்கவில்லை. நீங்கள் ஏன் வீடு வீடாக 
துண்டறிக்கை (நோட்டீஸ்) அச்சடித்து விநியோகம் செய்யவில்லை என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டனர். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் குப்பைக்காக தனியாக பணம் செலுத்தினால் மட்டுமே வரி வசூல் செய்ய முடியும் என்று பதிலளித்தார். இப்படி முரணாக பதிலளித்த பொதுமக்களிடம் நாங்கள் அரசு சொல்வதை மட்டுமே வசூல் செய்கிறோம் என்று விளக்கம் அளித்தனர். இதனால் பலர் வரி செலுத்தாமல் அமைதியாக காத்திருந்தனர். பின்னர் யோசித்து விட்டு கடும் வாக்குவாதம் நிகழ்த்திவிட்டு பலர் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி செலுத்தாமல் திரும்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் நேற்று காலை முதல் ஆவடி நகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களில் சிலர் வரி  வேண்டுமானால் செலுத்துகிறோம், குப்பைக்கு  பணம் செலுத்த முடியாது என்று அவர்கள் தெளிவான  முடிவு எடுத்து கொண்டு திரும்பிச் சென்று விட்டனர். 

Label