OUR CLIENTS
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் : டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் : டிரைகோஸ்டோமி கருவி அகற்றம் Posted on 10-Aug-2017 திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்  : டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்

சென்னை, ஆக.10-
திமுக தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நோயை சரிசெய்ய தொண்டையில் சிறு துளையிட்டு, ஒரு குழாய் பொருத்தி மருத்துவர்கள் டிரைகோஸ்டோமி சிகிச்சை அளித்தனர்.

சில தினங்களில் வீடு திரும்பிய அவரது உடல்நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தீவிர அரசியலில் அவர் ஈடுபடாமலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.

திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேரில் சந்தித்தார். அப்போது, ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்று திரும்பியது குறித்து அவரிடம் கி. வீரமணி தெரிவித்து வாழ்த்து பெற்றார். இதேபோல், கருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

Label