OUR CLIENTS
டெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர்! மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை
டெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர்! மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை Posted on 10-Aug-2017 டெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர்! மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை

கடலூர், ஆக.10-
 மேட்டூர் அணையில் தண்ணீரும் இல்லை, மழையும் பொய்த்ததால் டெல்டாவில் விவசாயப் பணிகள் துவங்கப்படாமல் கறம்பாக கிடக்கும் நிலங்களைப் பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்று பாசனத்தின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி தாலுகாக்களில் ஒரு லட்சத்து 5000 ஏக்கர் சாகுபடி பரப்பு உள்ளது. கல்லணையில் திறக்கப் படும் காவிரி நீர் தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை யில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் குறுவை மற்றும் சம்பா என இரு போக நெல் சாகுபடி நடந்தது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் போதிய அளவிற்கு மேட்டூர் அணைக்கு திறந்து விடாததால், மாவட்டத்தில் டெல்டா பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக குறுவை பட்டம் பொய்த்துப் போனது. சம்பா சாகுபடி மட்டுமே செய்து வந்த நிலை யில் கடந்த சில ஆண்டு களாக பருவமழை பொய்த்து வருவதால் டெல்டா விவசாயிகள் எதிர்காலத்தை நினைத்து அச்சம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 2015ல் மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், அதனை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் குறைந்த அளவு ஆற்று நீரைக் கொண்டு பயிரை காப்பாற்றிய நிலையில் அந்தாண்டு நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக பயிர் கள் சேதமடைந்து விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், கடந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனதால் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்து விவசாயிகள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.டெல்டா பாசன பகுதி யில் கடந்த சில ஆண்டு களாகவே வறட்சி, வெள்ளம் என இயற்கை பாதிப்பு ஏற்பட்டு வருவ தால் இப்பகுதி விவசாயி கள் பொருளாதார ரீதி யில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேட்டூர் அணையில் 37 அடி அளவே தண்ணீர் உள்ளது.

ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரமும் கடக்கிறது. இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பி, அதன் பின்னர் தண்ணீர் திறந்து, கடைமடை டெல்டா பகுதிக்கு தண்ணீர் எப்போது வந்து எப்போது சம்பா சாகுபடியை துவங்குவது என விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் நிலத்தை பதப்படுத்த எரு இடுதல், புழுதி உழவு செய்தல் உளளிட்ட பணிகளை துவங்காமல் உள்ளனர். இதனால் முப்போகம் விளைந்த பூமி தற்போது வானம் பார்த்த பூமி போல் கறம்பாக கிடக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எங்கு பார்த்தாலும் பசுமையாக காணப்படும் டெல்டா பகுதியில் நிலம் வெடித்து புல், பூண்டுகள் கருகிய நிலையில் கறம்பாக கிடப்பதை பார்க்கும் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

Label