OUR CLIENTS
அமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா? தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
அமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா? தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி Posted on 16-Aug-2017 அமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா?  தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை, ஆக.16-
அமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா? என்று டி.டி.வி தினகரனுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை - ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சிக்கு எதிராக சதி செய்யபவர்கள் யாராக இருந்தாலும் எட்டப்பர்கள் என்றும், அவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் கூறினார். அதிமுக-விற்குள் தற்போது அண்ணன்-தம்பி சண்டை என்றும், அதன் மூலம் சிலர் ஆதாயம் அடையத் துடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் எம்எல்ஏ.க்களை கடத்தி வைத்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்த குற்றச்சாட்டு பற்றியும் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா? 

இயலாமையை பழிபோட்டு ஆதாயம் தேட ஆசைப்படுகிறார்கள், நிராசையாகவே முடியும். எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி அளிக்கப்படவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்ற புகார்.   தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ. 1000 கோடி ஆகும் என்பதை முதல்வராகத் துடிக்கும் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.  ஸ்டாலின் எதிர்பார்க்கும் சூழ்நிலை தமிழக அரசியலில் வராது. அணிகள் இணைவது செயல்வடிவம் பெற்றுள்ளது.  

குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Label