OUR CLIENTS
6 மாத அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
6 மாத அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் Posted on 16-Aug-2017 6 மாத அரசியல் சூழல் காரணமாக  சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை, ஆக. 16-
6 மாத கால அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  115 எம்எல்ஏக்கள் எங்களுடன் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவைப்படும் 2 எம்எல்ஏக்கள் விரைவில் வருவார்கள். 6 மாத கால அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை. அதிமுகவின் ஏணி என்பது ஜெயலலிதா மட்டும்தான். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டி உள்ளது.  எங்களுக்கு பணத்தாசை கிடையாது, ஒற்றுமைக்காக மட்டும்தான் கூவத்தூரில் தங்கியிருந்தோம். அதிமுக அணிகள் இணைவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உள்ளன.  இவ்வாறு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Label