OUR CLIENTS
துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு
துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு Posted on 11-Aug-2016 துபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு

துபாய்:
விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது.


திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் தேதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 'டூட்டி பிரீ' கடையில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த லாட்டரிக்கான குலுக்கல் தற்போது நடைபெற்றது.

அந்த குலுக்கலில் முகம்மது பஷீர் அப்துல் காதர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் அவர், விமான விபத்தில் உயிர்தப்பியது, லாட்டரியில் பரிசு கிடைத்தது என இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "37 வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வருகிறேன். மிகவும் எளிமையாகவே எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன். இறைவன் எனக்கு இரண்டாவது வாழ்க்கையை தற்போது அளித்துள்ளதாகவே உணருகிறேன்.

இறைவன் என் மீது கருணை கொண்டு இந்த பணத்தை வழங்கியுள்ளான். அதனை நற்காரியங்களுக்காக பயன்படுத்துவேன். எனது பணி ஓய்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன்" என்றார்.

Label