அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை Posted on 21-Aug-2017
சென்னை, ஆக.21
அ.தி.மு.க. அணிகள் இன்று முறைப்படி இணைக்கின்றன. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. அணிகள் இன்று முறைப்படி இணைக்கின்றன. இன்று பிற்பகலில் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.ஆர். விஜய பாஸ்கர், சரோஜா, வளர்மதி, துரைக்கண்ணு, கருப்பண்ணன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள், அமைச்சரவை விரிவாக்கம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.