OUR CLIENTS
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் அடக்குமுறை கூடாது& மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் அடக்குமுறை கூடாது& மு.க.ஸ்டாலின் Posted on 21-Aug-2017 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் அடக்குமுறை கூடாது& மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக.21-
ஜனநாயக முறைப்படி தற்போதைய அரசு அகற்றப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் வருகிற 22 ஆம் தேதி அவர்கள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

  ஆனால் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று தலைமைச் செயலாளர் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடக்குமுறை மூலம் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தை அரசு கைவிடுவது நல்லது என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், அரசு ஊழியர்களுடன் இணைந்து ஜனநாயக ரீதியில் தற்போதைய அரசு வீழ்த்தப்படும் என்று கூறியுள்ளார்.

Label