OUR CLIENTS
அ.தி.மு.க. எங்களிடம்தான் உள்ளது திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டி
அ.தி.மு.க. எங்களிடம்தான் உள்ளது திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டி Posted on 21-Aug-2017 அ.தி.மு.க.  எங்களிடம்தான் உள்ளது திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டி

சென்னை, ஆக.21- 
எங்களை யாரும் தனிமைப்படுத்த முடியாது, அ.தி.மு.க. எங்களிடம்தான் உள்ளது என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியதாவது:  அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உங்களை தனிமைப்படுத்துவதற்கான முயற்சியா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அது எங்களை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி இல்லை. 

 அ.தி.மு.க.வில் இருந்து அவர்கள் தங்களை தாமே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். எங்களை யாரும் தனிமைப்படுத்தவே முடியாது. கட்சி எங்களிடம் தான் உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள். அந்த நிபந்தனையுடன் நான் சொல்லும் வார்த்தையையும் ஒப்பிட்டு பாருங்கள். அ.தி.மு.க.வை ஒட்டு மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் முதல் நிபந்தனை. 

2 நிபந்தனைகளுக்கும் வித்தியாசமே கிடையாது. எங்களால் ஆட்சிக்கு ஆபத்து வராது.  ஆட்சிக்கு ஆபத்து வருவதும் தீங்கு வருவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதே தவிர எங்கள் கையில் இல்லை.

இன்னொரு வி‌ஷயம். தமிழக அரசாங்கம் அனைத்து டெண்டர்களையும் இ-டெண்டராக விட்டு முடிந்த அளவு அரசாங்கத்துக்கு லாபத்தில் செய்யக்கூடிய டெண்டர்கள் அனைத்தையும் இ-டெண்டரில் விட்டு அதில் எந்தவித டெண்டர்களையும் தங்கள் சொந்த கட்டுப்பாட்டில் வைக்காமல் 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் செய்தார்களே என்றால் ஆட்சிக்கு ஆபத்து இருக்காது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைத்தால் எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கண்டிப்பாக கொடுப்போம். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் கேட்கிறோம். சி.பி.ஐ. விசாரணையும் இதில் இருந்தால் நன்றாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label