எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் கால்கோள் விழாஅமைச்சர்கள் பங்கேற்பு Posted on 21-Aug-2017
ஈரோடு, ஆக. 21-
ஈரோட்டில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கால்கோள் விழாவில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஈரோட்டில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவிற்கான கால்கோள் விழா ஈரோடு ஏ.ஈ.டி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.