OUR CLIENTS
மால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்
மால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள் Posted on 21-Aug-2017 மால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்

தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். மோடம்கள் பாட்நெட் எனும் புதிய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 60,000 பி.எஸ்.என்.எல். மோடெம்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. மோடெம்களில் சிவப்பு நிற எல்இடிக்கள் பிரகாசித்து இண்டர்நெட் வேகம் சீரற்ற முறையில் கிடைத்தால் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். 

முதற்கட்டமாக தேசிய இண்டர்நெட் பேக்போனின் இன்டெர்னல் மோடெம்களில் மால்வேர் சரி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களது மோடெம்களை தாங்களாகவே ரீசெட் செய்து கொள்ள வேண்டும். ஐதராபாத் டெலிகாம் அதிகாரிகள் 45 சதவிகிதம் பிராட்பேண்ட் இணைப்புகள் இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை 040&23231504 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம். 

இதுதவிர வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு சென்று தங்களது புகார்களை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெரிவிக்கலாம் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் அலிவேலு தெரிவித்துள்ளார். 

புதிய பதிப்புகளை தொடர்ந்து மோடெம்கள் சார்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பி.எஸ்.என்.எல். மோடெம்கள் சீன பொருட்கள் கிடையாது, இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது தான் என பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய மால்வேர் மூன்று குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் வழங்கிய மோடெம்களில் கர்நாடகா வட்டாரத்தில் முதலில் பாதித்தது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது மோடெம்களை ரீசெட் செய்து பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும். 

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது மோடெம்களை (http://192.168.1.1) தளத்திற்கு சென்று மோடம் யூசர் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவு செய்து மேனேஜ்மென்ட் பக்கத்திற்கு சென்று acl ரேடியோ பட்டனை கிளிக் செய்து மோடம்களை ரீபூட் செய்யலாம்.

Label