OUR CLIENTS
இந்திய வீரர்கள் மீது கற்களை வீசிய சீனா
இந்திய வீரர்கள் மீது கற்களை வீசிய சீனா Posted on 21-Aug-2017 இந்திய வீரர்கள் மீது கற்களை வீசிய சீனா

சிக்கிம், ஆக. 21-
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா- சீனா- பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை செய்து வருவதால் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா- சீனா ஆகிய இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. லடாக் எல்லையில் உள்ள பாங்காங் ஏரி சீனாவின் எல்லை வரை இருக்கிறது, இந்த ஏரியில் பெரும்பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது.

இப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் கடந்த 15-ந் தேதியன்று சுதந்திர தின நாளில் சீன ராணுவத்தினர் பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

இதனை இந்திய வீரர்கள் தடுத்தபோது, சீன வீரர்கள் கற்களை வீசி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், இதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Label