ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு Posted on 21-Aug-2017
பாக்தாத், ஆக. 21-
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது.
தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் சமீபத்தில் மீட்கப்பட்டது.
அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் வசம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று முன்தினம் ராணுவத்தால் மீட்கப்பட்டது.
இத்தகவலை ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அபாடி டெலிவிஷனில் அறிவித்தார். அப்போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும் என தெரிவித்தார். தல் அபார் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி.
கடந்த 2014-ம் ஆண்டு இது ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமானது. மொசூலுக்கும் சிரியா எல்லைக்கும் இடையே இது உள்ளது. தரைவழி மற்றும் விமான தாக்குதல்கள் மூலம் இந்தநகரம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.