OUR CLIENTS
தீவிரவாதிகளின் வாகன தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்
தீவிரவாதிகளின் வாகன தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல் Posted on 21-Aug-2017 தீவிரவாதிகளின் வாகன தாக்குதல்களை  தடுக்கும் வகையில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்

மெல்போர்ன், ஆக. 21-
சமீபகாலமாக உலகெங்கும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மக்கள் மீது வாகனங்களை ஏற்றிக் கொன்று வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திடையே லாரியை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்குமுன் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சாலையை கடக்க முயன்ற பாதசாரிகள் மீதி வேனை ஏற்றி தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தாக்குதல்கள் உலக தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வாகன தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை தடுப்புகளை அதிகளவில் அமைக்க வேண்டும். வாகன தாக்குதல்களை தடுக்கும் வகையிலான  பாதுகாப்பு சாதனங்களை உருவாக்க வேண்டும். 
அவற்றை வடிவமைக்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Label