OUR CLIENTS
இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்
இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம் Posted on 21-Aug-2017 இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்

ரஷ்யா, ஆக. 21- 
இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதராக நிக்கோலே குடாசேவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக இருந்தவர் அலெக்சாண்டர் கடாகின். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட கடாகின், கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லி மருத்துவமனையில் காலமானார். நன்றாக இந்தி பேசத் தெரிந்த அவர் மறைந்த பிறகு கடந்த 7 மாதங்களாக ரஷ்ய தூதர் பணியிடம் நிரப்பப்படவில்லை. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிபர் புடினின்  அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதராக நிக்கோலே குடாசேவ் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு ஆசிய விவகாரங்களை நன்கு அறிந்தவரான நிக்கோலே, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் செயலாளராக பதவி வகித்து வந்தார். 2014-15ல் மார்சல் தீவின் ரஷ்ய தூதராக அவர் பணிபுரிந்து வந்தார். 

Label