OUR CLIENTS
கரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்! அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை!
கரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்! அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை! Posted on 21-Aug-2017 கரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்! அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை!

கரூர், ஆக.21- 
கரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் தொகுதி அந்தஸ்து கிடைத்ததுதான் மிச்சம். வேறெந்த பணிகளும் நடந்ததாக தகவல்கள் இல்லை,. தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

அடிப்படை பணிகளே நிறைவேற்றாத நிலை தொடருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயாஸ்கரால்  கரூர் தொகுதி பிந்தைய காலத்துக்கே போய்விட்டது.  அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து அரசியல் நடத்தவே நேரம் இல்லை. அப்புறம் எங்கு தொகுதியை பார்க்க நேரமிருக்கும் என்று கரூரில் இருந்து புகார் கணைகள் வர ஆரம்பித்து விட்டது. 

இன்னமும் சிறிது நாள் இப்படியே போனால் மெரீனா போராட்டம் போல கரூரிலும் போராட்டம் வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொந்தளிப்பில் பொதுமக்கள் உள்ளனர். கரூர் நகரப்பகுதிகளான தான்தோன்றிமலை, சிவசக்திநகர், கிழக்கு,மேற்கு உள்ளிட்ட தெருக்களுக்கு 45 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதாம். சமீபத்தில் வந்த குடிநீரில் சேறும், சகதியும் வர இது சம்மந்தமாக நகராட்சிக்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

அதேபோல் கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் எல்லாம் வீணாக சாலையில் செல்கிறது. இது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கரூர் அருணாச்சலம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலைகளில்தான் சென்று வருகின்றனர்.

 இவர்கள் தார் சாலை வசதி கேட்டு எத்தனையோ மனு கொடுத்தும் அமைச்சர் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் தொகுதியில் எங்கு திரும்பினாலும் குறைகளை கண்களால் பார்க்கும் அளவுக்கு காணப்படுகிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமத்தில் உள்ள இந்திரா நகரில் நூற்றுக்கும் மேற்படட் வீடுகள் உள்ளன. 

இங்கு வசிப்பவர்கள் பலரும் நாமக்கல் மாவட்டம், பீமநாயக்கன்பட்டியில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ரேஷன் கார்டுகளுக்காக அலைந்து திரிகின்றனர். இதுவரையில் கிடைக்கவில்லை. அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை சொல்லியும் கண்டுகொள்ளவே இல்லை. கரூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்காக இயங்கும் இ&சேவை மைய இயந்திரம் ஒன்று மட்டுமே உள்ளது. 

இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுதான் செல்கிறார்கள். கூடுதலாக ஒரு இயந்திரம் கேட்டால் அமைச்சர் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  கரூரில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் ஏராளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதியில் வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் கொசுத்தொல்லை பெருகி வருகிறது. எப்போதும் வடிகால் அடைபட்ட நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுபோன்ற நிலை கரூர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. மேலும் விஷக்காய்ச்சல் அச்சத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சுகாதாரகேடு விளைவிக்கும் வகையில் நிலவும் இவற்றை போக்கும் வகையிலான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வா’ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால் அமைச்சர் அதையெல்லாம் செய்யாமல் டெங்குவால் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை. இந்த கரூர் மக்கள் நாசமாய் போனாலும் பரவாயில்லை.செந்தில்பாலாஜியை இனி அரசியலை விட்டு ஒழிப்பதே என் வேலை என்று கரூர் தொகுதி மட்டுமல்ல. கரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியிலும், எவ்வித வளர்ச்சி பணிகளையும் செய்யவே இல்லை. பெயருக்கு சைக்கிள் கொடுத்தேன். 

நலத்திட்ட உதவிகள் செய்தேன் என்று சொல்லிவிட்டு சீன் காட்டிவிட்டு செல்வதோடு சரி. இப்படி எந்த வசதிகளையும் செய்து கொடுக்காத அமைச்சரிடம் கடந்த சனிக்கிழமை அன்றுகூட வாங்கல், மன்மங்கலம், காதப்பாளை, ஆத்தூர், பூலாம்பாளையம் சேர்ந்த மக்கள், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைச்சர் உடனே நாம் கொடுக்கும் மனுக்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்து விடுவார் என்று நினைத்தார்களோ என்னவோ பாவம், நீண்ட நேரம் காத்திருந்து மனு கொடுத்ததுதான் கொஐமையான விஷயம் ஆகும். 

கரூர் மாநகரம் முழுவதும் அமைச்சர் பெயரைச் சொல்லி பலரும் வீதி வீதியாக அனுமதியில்லாமல் மது விற்பனை செய்கிறார்கள். அவர்களை கண்டிக்கவோ பிடித்து கொடுக்கவோ இல்லை. கரூர் தொகுதி மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி  அசோக்கின் கார் டிரைவர் பிரபாகரன் 
எம்பி தம்பிதுரையைப் பற்றியும், அமைச்சர் விஜயபாஸ்கரை பற்றியும் அவதூறு செய்தியை வெளியிட்டதற்காக காவல் துறையை விட்டு பிரபாகரனை கைது செய்து தன் ஆத்திரத்தை தீர்த்து கொண்டிருக்கிறார். 

கரூரில் சுகாதாரக்கேடு, போக்குவரத்து நெருக்கடி, சரியில்லாத குண்டும் குழியுமான சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, அமைச்சர் விஜயபாஸ்கரின் அராஜகம் இவையெல்லாவற்றையும் எதிர்த்து கரூர் மக்கள் புரட்சி செய்யப்போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எடப்பாடி தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label