OUR CLIENTS
சிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்!
சிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்! Posted on 21-Aug-2017 சிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்!

காரைக்குடி, ஆக.21- 
 அந்நியச் செலாவணி மோசடி  வழக்கில் தேடப்படும் நபராக சிபிஐயால் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய கார்த்தி ப.சிதம்பரத்தை வில்லங்க கருப்பு விடாமல் விரட்டுகிறது. 

ஷீனா போரா கொலை வழக்கில் கைதான பத்திரிகையாளர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியின் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் எட்டு பேர் மீது கடந்த மே மாதம் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவானது. இதுதொடர்பாக சிபிஐ பலமுறை சம்மன் அனுப்பியும் கார்த்தி ப.சிதம்பரம் விசாரணைக்கு செல்லவில்லை. 

கார்த்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி, சிபிஐ அவரை தேடப்படும் நபராக லுக் அவுட் நோட்டீசை சர்வதேச இன்டர்போலுக்கும் அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தார் கார்த்தி. உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது சிபிஐ.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காத்தியை விசாரணையில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டதுடன் கைது செய்வார்கள் என்று நீங்கள் பயந்திருந்தால் முன்ஜாமீன் வாங்கியிருக்கலாம். அதைச் செய்யவில்லை எனும்போது விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது.

 உயர்நீதிமன்ற தடையை ரத்து செய்து வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திப் போட்டதுடன் சிபிஐ விசாரணைக்கு முதலில் சென்றுவிட்டு நீதிமன்றத்துக்கு வாருங்கள் என்று கடுமையாக கூறிவிட்டது. 

கார்த்தியின் சார்பில் ஆஜரான முன்னாள் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், கார்த்தி விசாரணை செய்ய முடியும் வரை வெளிநாட்டுக்குப் போகமாட்டார் என்ற உத்தரவாதப் பத்திரம் கொடுப்பதாக சொன்னதை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான இரு நபர் அமர்பு நிராகரித்தது. 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் விவகாரம் உட்பட நீதிமன்றத்துக்கு கசப்பான அனுபவம் இருக்கிறது. சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மேத்தா, குற்றப்பதிவு டில்லியில் செய்யப்பட்டதால்  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தில் அதிகாரமே இல்லை என்று வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

 ஏற்கனவே வாசன் ஐகேர் விவகாரத்திலும் வழக்கையும் சிக்கலையும் சந்தித்து வரும் கார்த்தி ப.சிதம்பரத்தை வில்லங்கம் விடாது விரட்டுகிறது பாவம். இவர் என்னதான் இந்த விவகாரத்தில் செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label