OUR CLIENTS
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விஜயகாந்த் பிறந்த நாள் மாற்றம்?
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விஜயகாந்த் பிறந்த நாள் மாற்றம்? Posted on 21-Aug-2017 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்  விஜயகாந்த் பிறந்த நாள் மாற்றம்?

சென்னை, ஆக.21- 
விநாயகர் சதுர்த்தியால், விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டுமா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.,வை தொடங்கிய பின், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், தன் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வந்தார். அந்நாளில், தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, பிரியாணி விருந்து அளித்து அசத்துவது வழக்கம்; பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும், தே.மு.தி.க.,வினர் போட்டி போட்டு, இவ்விழாவை கொண்டாடுவர். சட்டசபைத் தேர்தல் தோல்வியால், கட்சியில் இருந்து, முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்களும் வெளியேறினர். அதனால், விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம், கடந்தாண்டு களை இழந்தது.தற்போது, கட்சியை கட்டமைக்கும் நடவடிக்கையில், விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில், வரும், 25ம் தேதி, விஜயகாந்தின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம், தன் பிறந்த நாளை வழக்கம் போல கொண்டாட வேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். இதற்காக, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களை, தன் வீட்டுக்கு அழைத்து வர, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாநிலம் முழுவதிலும் இருந்து, கட்சியினரை சென்னைக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டது. 

ஆனால், அதே நாளில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. எனவே, அதை காரணம் காட்டி, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சென்னை வருவதை மறுத்து வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி என்பதாலும், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், பிரியாணி விருந்து கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதனால், இந்தாண்டும், விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் களையிழக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிறந்த நாள் கொண்டாட்டத்தை, வேறு நாளில் வைக்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது.

Label