OUR CLIENTS
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் ரத்து
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் ரத்து Posted on 22-Aug-2017 அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் ரத்து

கவுகாத்தி, ஆக.22- 
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளும் பெற முடியாது, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட முடியாது என்ற புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அசாமில் தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது சாதாரண வி‌ஷயமாக உள்ளது. இதனால் அங்கு ஜனத்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகள் பிறப்பை கட்டுப்படுத்தும் வகையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது. இதற்கான மசோதாவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதில் அடுத்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றி சட்டத்தை அமலுக்கு கொண்டுவர உள்ளனர்.  அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வர உள்ளது. 

இந்த சட்டத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது. அரசு வழங்கும் எந்த சலுகைகளும் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பவை உள்ளிட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் அதையும் மீறி நிச்சயம் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மாநில சுகாதார மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.  இதுசம்மந்தமாக மேலும் அவர் கூறும்போது, சட்ட வரைவுகள் தயாரிக்கும் பணி முழுமையாகிவிட்டது. 

இந்த சட்டத்தின் மூலம் அதிக குழந்தைகள் பிறப்பை தடுக்க முடியும். மக்களுக்கும் முழுமையான நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.

Label