OUR CLIENTS
எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனிமேல் நீடிக்காது : புகழேந்தி பேட்டி!
எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனிமேல் நீடிக்காது : புகழேந்தி பேட்டி! Posted on 22-Aug-2017 எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனிமேல் நீடிக்காது : புகழேந்தி பேட்டி!

சென்னை, ஆக.22- 
  தைரியம் இருந்தால் இன்றே சசிகலாவை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டியது தானே என அதிமுக கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

நாட்டு மக்களை முழுமையாக ஏமாற்றி இருக்கிறார்கள் என்று பன்னீர் - எடப்பாடி இணைப்பு குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை எடப்பாடி அரசு சரியில்லை என்று கூறிவந்த ஓ.பி.எஸ். எப்படி அவருடன் இணைந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

சசிகலா இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வராகியிருப்பார் எனவும் வினவியுள்ளார். எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனிமேல் நீடிக்காது என புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரை நீக்க முடிவு செய்தவர்கள் பதவியில் நீடிக்க முடியுமா?. மேலும் அமைச்சர்கள் கூடிவிட்டால் அதிமுக-ஆகி விடுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சர்கள் எல்லோரும் சசிகலா காலில் விழுந்தவர்கள் தானே என புகேழந்தி கூறியுள்ளார். சினிமா நடிகருக்கு பயந்துகொண்டு அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியை நீக்கியது ஆட்சியாளர்கள் தானே இவர்கள். சசிகலாவை நீக்குவது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டட்டும் பார்க்கலாம் என புகழேந்தி சவால் விடுத்துள்ளார்.

Label