OUR CLIENTS
கதிராமங்கலத்தில் 91வது நாளாக போராட்டம் கண்டுக்கொள்ளாத அரசுகள்: மக்கள் வேதனை!
கதிராமங்கலத்தில் 91வது நாளாக போராட்டம் கண்டுக்கொள்ளாத அரசுகள்: மக்கள் வேதனை! Posted on 22-Aug-2017 கதிராமங்கலத்தில் 91வது நாளாக போராட்டம் கண்டுக்கொள்ளாத அரசுகள்: மக்கள் வேதனை!

திருவிடைமருதூர், ஆக.22- 
எண்ணெய் நிறுவனம் வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி கதிராமங்கலத்தில் கிராமமக்கள் நேற்று 91வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள், குடிநீர் பாதிக்கப்படுவதாக கூறியும், உடனே எண்ணெய் நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி  கதிராமங்கலம் மக்கள் போராடி வருகிறார்கள்.  அவர்கள் அங்குள்ள ஐயனார் கோயில் திடலில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி  தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

நேற்று 91வது நாளாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பொதுமக்கள் போடும் ஓட்டு மட்டும் வாங்கிச் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் மாநில, மத்திய அரசுகள் அவர்களது துயர் துடைக்க முன்வராதது வேதனையாக உள்ளது. வேண்டாம் என்று சொல்வதை வலுக்கட்டாயமாக திணிக்கும் பணியில் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து அடாவடியாக செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மக்களுக்காக அரசு நடத்தப்படுகிறதா அல்லது அரசுக்காக மக்கள் வாழ்கிறார்களா என்பது தெரியாத நிலை நிலவி வருகிறது. குஜராத், புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்றினால் நல்லது. 

Label