OUR CLIENTS
அதிமுக பொதுச்செயலாளார் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் தனிப்பட்ட கருத்து ஓ.எஸ்.மணியன் சொல்கிறார்!
அதிமுக பொதுச்செயலாளார் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் தனிப்பட்ட கருத்து ஓ.எஸ்.மணியன் சொல்கிறார்! Posted on 22-Aug-2017 அதிமுக பொதுச்செயலாளார் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் தனிப்பட்ட கருத்து ஓ.எஸ்.மணியன் சொல்கிறார்!

சென்னை, ஆக. 22- 
சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் ஓ..எஸ். மணியன் கூறிஉள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வலுவான கோரிக்கையை முன்வைத்தது.  

இருதரப்பு அணியும் இணைந்து உள்ளது. அக்கட்சியின்  எம்.பி., வைத்திலிங்கம் பேசுகையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என அறிவித்தார். 
விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார். 

 இந்நிலையில் அமைச்சர் ஓ..எஸ். மணியன் சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என கூறிஉள்ளார்.  பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், அதிமுக பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், உடனடி தேவை என்ற நிலையில் பொதுகுழுக்கு கூடி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

அதன்படி பொதுக்குழு கூடிதான் பொதுச்செயலாளர் பற்றி முடிவெடுக்க முடியும். இன்றைய கூட்டத்தில் சசிகலா பற்றியோ, பொதுச்செயலாளர் பற்றியோ ஆலோசனை செய்யப்படவில்லை. சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுப்பது பற்றி வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய ஓ.எஸ். மணியன், புரட்சி தலைவி ஜெயலலிதாவின் அனுமதிபெற்று, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, ஜெயலலிதாவின் உழைப்பினால் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எவரும் அதிமுக ஆளவேண்டும் என்றுதான் நினைப்பார்கள், எதிராக முடிவு எடுக்கமாட்டார்கள் என்றார். சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் உங்களுடைய ஆதரவு? என்ற கேள்விக்கு கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறிவிட்டார்.

Label