OUR CLIENTS
புதிய வரலாறு படைத்துள்ளோம்; சின்னத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமி!
புதிய வரலாறு படைத்துள்ளோம்; சின்னத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமி! Posted on 22-Aug-2017 புதிய வரலாறு படைத்துள்ளோம்; சின்னத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை, ஆக.22- 
அதிமுகவின் இரு அணிகளும் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி இணைந்தன. அதன் அடையாளமாக ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகுலக்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 

அப்போது, தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் கடந்த 6 மாத காலத்தில் எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற விதமாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனமுவந்து இணைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளார். 

கட்சியின் கனவை நனவாக்க வேண்டும் என்று இன்று ஒன்றாக இணையும் முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தில் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கியது இந்த கட்சி. அவர்களுடைய கனவு நனவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இணைப்பை நிறைவேற்றியுள்ளோம்.

 இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. பிரிந்தால் இணைந்ததாக வரலாறு கிடையாது. ஆனால் அதிமுக ஒன்றுதான் மக்களோடு மக்களாக இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒன்று கூடிப் பேசி, பிரச்னைகளைக் களைந்து மீண்டும் இந்த இயக்கம் வலுப்பெறும் என்பதை நிரூபித்திருப்பது அதிமுகதான். 

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. இடையில் புகுந்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் சம்மட்டி அடி அளித்துள்ளோம். ஒரு நூல் அளவு கூட இனி இக்கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடாது.  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக  பன்னீர்செல்வம் செயல்படுவார். இணை ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட உள்ளேன். 

துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் பொறுப்பேற்பார்கள் என்று பழனிசாமி அறிவித்தார். இனி கருத்து வேறுபாடு இல்லாமல் செயலாற்றுவோம். இன்று இணைந்துள்ளோம். விரைவில் கட்சிச் சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.

Label