OUR CLIENTS
கடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத்! எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்!
கடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத்! எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்! Posted on 22-Aug-2017 கடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத்!  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்!

கடலூர், ஆக.22- 
அதிமுக ஆளுங்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. இது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆளுங்கட்சியின் இப்போதைய தலைமையில், ஒற்றை அமைச்சரைவிட நான்கு எம்எல்ஏக்களுக்கு மரியாதை அதிகம்.

 இந்த அடிப்படையில் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் ஓரங்கட்டப்பட்டதும், அவருக்கு எதிராகச் செயல்படும் நான்கு எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளர்வித்ததும், மாவட்டத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த விழாவுக்கு பணத்தை வாரி இறைத்துப் பெரும் கூட்டத்தை கூட்டினார். எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இணையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்பட்டிருந்தன பிரமாண்ட கட்&அவுட்கள்.

கடலூர் மாவட்ட ஆளும் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் அமைச்சர் எம்.சி.சம்பத்தோடு உரசலில் இருக்கிறார்கள். விழாவுக்காக வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதிமுக எம்பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி மற்றும் எம்எல்ஏக்கள் சத்யா, முருகுமாறன், பாண்டியன், கலைச்செல்வன் ஆகியோர் ஓர் அணியாகச் சென்று முதல்வரை வரவேற்றனர். 

இந்த அணிக்கு தலைமை தாங்குவது அருண்மொழித்தேவன் எம்.சி.சம்பத் தரப்பினர் தனி அணியாகச் சென்று வரவேற்றனர். வரவேற்பு முடிந்து காரில் ஏறப்போன முதல்வர், அருண்மொழித்தேவன் எங்கே, கூப்பிடுங்கள் என்றார்.

அப்போதே எம்.சி.சம்பத் முகம் சிவந்து விட்டது. அருண்மொழித்தேவன், எம்.சி.சம்பத் ஆகிய இருவரையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு சுற்றுலா மாளிகைக்குச் சென்றார்.

முதல்வர் அங்கு முதல்வரைச் சந்தித்த எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும், நீங்கள் வந்ததால்தான் நாங்கள் வந்தோம் என்றனர். அதற்கு முதல்வர் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என கூறினார். விழா தொடங்கியது. மேடையில் முருகுமாறனையும், அருண்மொழித்தேவனையும் அடிக்கடி கூப்பிட்டு எதையோ கேட்டுக் கொண்டே இருந்தார் முதல்வர். 

அதை அமைச்சர் சம்பத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டே இருந்தார்.

இவ்வளவு பிரமாண்ட ஏற்பாடுகளை சம்பத் செய்திருந்தும், அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அவருக்கு எதிரான இந்த நான்கு எம்எல்ஏக்களின் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டு மன்னார்கோயில் ஆகிய தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்.

 தடுப்பணைகள், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், காட்டுமன்னார்கோயில் கல்லூரி, அந்த கல்லூரிக்கு அருண்மொழித்தேவன் வேண்டுகோள்படி எம்ஜிஆர் பெயர் என அமைச்சர் சம்பத் தவிர மற்ற அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது சம்பத்தின் கடலூர் தொகுதிக்கு ஒண்ணுமில்லையா? என்று சிலர் கூச்சலிட்டது எடப்பாடி காதில் விழவில்லையா என்ன?. 

கோஷ்டி பூசல் பூதாகரமாக எடப்பாடி முன்னிலையில் அரசு விழாவான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை பயன்படுத்தப்பட்டது வெட்கக்கேடானது ஆகும்.

தேர்தலில் சீட்டு வாங்கி தந்த எம்.சி.சம்பத்துக்கு இதுதேவையா? வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போன்று இப்போது கடலூர் மாவட்ட எம்எல்ஏக்கள் சம்பத் மீது பாய்ந்துள்ளனர்.

இதை சம்பத் எப்படி சமாளிப்பார், களையெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label