OUR CLIENTS
ஆந்திரா இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக புகார்
ஆந்திரா இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக புகார் Posted on 23-Aug-2017 ஆந்திரா இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக புகார்

நகரி, ஆக.23- 
ஆந்திரா இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூமாநாகி ரெட்டி. அதன்பின் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் பூமா நாகிரெட்டி சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து நந்தியாலா தொகுதிக்கு  இன்று (23-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

தெலுங்கு தேசம் சார்பில் பூமா பிரமானந்த ரெட்டியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் ஜில்லா மோகன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்று ஆளும் கட்சியாக தெலுங்கு தேசம் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 13 நாட்கள் பிரசாரம் செய்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது. 28-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.  இந்த நிலையில் நந்தியாலா தொகுதியில் வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  

இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதி கருணாகர ரெட்டி கூறியதாவது:-
நந்தி யாலா தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து உள்ளது. கோடிக் கணக்கில் பணம் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினர் வீடுகளில் சோதனை செய்யப்படு வதில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Label