OUR CLIENTS
பாகிஸ்தான் மீதான டிரம்பின் விமர்சனத்துக்கு இந்தியா வரவேற்பு
பாகிஸ்தான் மீதான டிரம்பின் விமர்சனத்துக்கு இந்தியா வரவேற்பு Posted on 23-Aug-2017 பாகிஸ்தான் மீதான டிரம்பின் விமர்சனத்துக்கு இந்தியா வரவேற்பு

புதுடெல்லி, ஆக. 23-
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் மூத்த அதிகாரிகளுடன் கடந்த 18-ந் தேதி ஆலோசனை நடத்தினார்.

 அதன் தொடர்ச்சியாக, நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகள் மீதான புதிய கொள்கைகளை அறிவித்தார்.

டிரம்ப் தனது இன்றைய உரையின் போது, ”பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்வதாகவும், இனியும் அமெரிக்கா இதனை பொறுத்துக் கொள்ளாது. 
மேலும், தீவிராவதிகளுக்கு புகலிடம் அளிப்பதை விட்டுவிட்டு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்” தெரிவித்தார்.  

மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா உதவ வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக உள்ளது என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்திற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. 

மேலும், ஆப்கானிஸ்தான் உடனான புதிய கொள்கைகளையும் இந்தியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ”ஆப்கான் அரசு மற்றும் மக்களுக்கு அந்நாட்டில் அமைதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஏற்படுவதற்கு உதவ இந்திய அரசும் உறுதி பூண்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் உடனான பாரம்பரிய உறவை இந்தியா மேம்படுத்தும். இந்தியாவும் இந்த கவலைகள் மற்றும் நோக்கங்களை பகிர்ந்து கொள்கிறது.” என்றார்.

Label