OUR CLIENTS
சென்னைக்கு 378-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய தொழிலாளர்கள்
சென்னைக்கு 378-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய தொழிலாளர்கள் Posted on 23-Aug-2017 சென்னைக்கு   378-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய தொழிலாளர்கள்

சென்னை, ஆக.23- 
சென்னையின் 378-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரிமுனையில் தொழிலாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்று விக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதியை நினைவூட்டும் வகையில் நேற்று 378-வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை பாரிமுனையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் காசிசெட்டி தெருவில் தொழிலாளர்கள் இணைந்து புகைப்பட கண்காட்சியை நடத்தினர். இதில், சென்னை மாநகரின் அரிய புகைப்படங்களை அவர்கள் காட்சிப்படுத்தினர்.

கண்காட்சியில் சென்னையின் முக்கிய அடையாளங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன்  கட்டிடம், ஜார்ஜ் டவுன், உயர்நீதிமன்ற வளாகம், பழைய துறைமுகம் என 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Label