OUR CLIENTS
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் Posted on 23-Aug-2017 நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்

புதுடெல்லி, ஆக.23- 
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்றும், வழக்கு இல்லாவிட்டால் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புதல் வாங்கியிருப்போம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி தமிழக அரசு ஏற்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக முதலமைச்சர் டெல்லி சென்று பலமுறை முயற்சி செய்தார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்ததால்தான் பிரச்சனை. இல்லையென்றால் ஒப்புதல் வாங்கியிருப்போம்.  

 நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம். முந்தைய அரசுகள் செய்த தவறை சரிசெய்யவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, நீட் விவகாரத்தில் அ.தி.மு.க. மீது பழிபோடுவது ஏற்கக்கூடியது அல்ல. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label